வலிவடக்கில் ஆமிக்கு ஆசுபத்திரி!
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான தனியார் நிலப்பரப்பில் இராணுவம் அத்துமீறி சட்டவிரோதமாக இராணுவ வைத்தியசாலை ஒன்றை கட்டி வருகின்றது
குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் வலி வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 2,600 ஏக்கர் காணிகளில் ஒரு தொகுதி விடுவிக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சந்திரசேகர் அறிவித்திருந்த நிலையில் வைத்தியசாலை கட்டுமானம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி தையிட்டி சட்டவிரோத விகாரை நெருக்கடிக்கு ஒரு மாத காலப்பகுதியில் தீர்வு காணப்படும் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் அறிவித்து தற்போது 8 மாதங்கள் கடந்து விட்டது
இதுவரை எந்த தீர்வும் இல்லை. சட்டவிரோத தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரர் அபகரிப்பட்ட நிலத்தில் எதையும் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment