தையிட்டி விடுவிப்பு சாத்தியமா?
யாழ். தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள காணி அளவீட்டு பணிகள் சந்தேகத்தை மக்களிடையே தோற்றுவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (11.04) தையிட்டிக்கு விஜயம் செய்திருந்த அரச அமைச்சர் சந்திரசேகரன், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை முறையாக அளவீடு செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இருப்பினும், நிலங்கள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், சர்ச்சைக்குரிய விகாரை மற்றும் அது அமைந்துள்ள காணி குறித்து எந்தவொரு தெளிவான முடிவும் அறிவிக்கப்படவில்லை .
அதேவேளை சட்டவிரோத விகாரையை அரச திணைக்களங்களில் முறைப்படி பதிவு செய்வதற்கான இரகசிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையினால் நிலமிழந்த தமிழர்கள் ஒரு சாரார் அரசிற்கு ஆதரவாக உள்ள போதும் மற்றொரு சாரார் எதிர்ப்பு போராட்டங்களிற்கு அழைப்பு விடுத்துவருகின்றனர்.

Post a Comment