தையிட்டி விகாரை :இளைஞர்கள் கைது!

 


தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படங்களை எடுத்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில் , விகாரைக்கு சற்று தொலைவில் , காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் , விகாரைக்கு செல்வதாக கூறி விகாரை பகுதிக்கு சென்று ,  புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

அதனை அவதானித்த பொலிஸார்  இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments