பல்டியடித்தது கத்தோலிக்க திருச்சபை!

 



இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றிருக்கவில்லையென சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையும், தெரிவித்துள்ளன.

முன்னதாக இனப்படுகொலையே நடைபெற்றதாக அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் தனது சொந்த கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார், என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை எப்போதும் நல்லிணக்கம், சமூக உரையாடல் மற்றும் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் மதித்தல் ஆகியவற்றுக்காக நின்றது தொடர்ந்தும் நிற்கும் என விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் நடந்த போர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரே தவிர, எந்தவொரு இனக்குழுவிற்கும் எதிரான போர் அல்ல என்று கத்தோலிக்க திருச்சபையின், தேசிய சமூகத் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டதே, 30 ஆண்டு காலப் போர் என்று அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துகள், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆயர்கள் பேரவை என்பன இதனைத் தெரிவித்துள்ளன.


No comments