ஒரு வாரமாக குகையில் சிக்கியிருந்த 5 பேர் உயிருடன் மீட்பு!
லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஐந்து பேர் இன்று புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டதாக, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
ஐந்து பேரை உயிருடனும் பாதுகாப்பாகவும் மீட்டுள்ளோம். இன்னும் இருவரைத் தேடி வருகிறோம்," என 'ரெஸ்க்யூ வாலண்டியர் ஃபார் பீப்பிள்' அமைப்பு சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் இந்தச் செய்தியைக் கொண்டாடுவதைக் காட்டும் காணொளியை அந்தக் குழு முகநூலில் பதிவிட்டது.

Post a Comment