நீதிபதி பணியிலிருந்து இடைநிறுத்தம்!
ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி நீதிவான்கள் பதவி இழப்பது இலங்கையில் தொடர்கின்றது.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.சி. றிஸ்வான் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நீதிச் சேவை ஆணைக்குழு, இவரை - வெள்ளிக்கிழமை (22) முதல் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.
இது தொடர்பான பக்ஸ் அறிவித்தல், அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
றிஸ்வானுக்கு எதிராக - பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அண்மையில் இடமாற்றப்பட்டிருந்தார்.
றிஸ்வானுக்கு எதிரான விசாரணைகளை - நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்த நிலையில், அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஏ.சி. றிஸ்வான் மருதமுனையைச் சேர்ந்தவராவார்.

Post a Comment