அனுர வாழ்த்து!:அல்லக்கைகள் போர்க்கொடி?

 


இந்திய அரசிற்கெதிராக இலங்கை அரசின் தூண்டுதலில் உள்ளுர் வடக்கு மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கிவருவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றகின்றது.

முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தை மூடப்போவதாக தெரிவித்த தரப்புக்கள் தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் என எச்சரித்துள்ளன.தவறின் அவருக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ் மாவடட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனம் எச்சரித்துள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சதீவை இந்தியா மீட்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நாங்கள் அதை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை ஏனெனில் தமிழ்நாட்டில் இடம் பெறும் தேர்தல்களில் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வேட்பாளர்கள் அவ்வாறு பேசுவது தொடர் கதையாக இருந்த வருகிறது.

தாங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி கச்சதீவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவதை நாங்கள் விரும்பவில்லை.

கச்சதீவு விவகாரத்தை கையில் எடுக்க நினைப்பீர்கள் ஆயின் யாழ் மாவட்ட மீனவ சமுதாயமாக நாங்கள் எமது பாரிய எதிர்ப்பினை காட்டுவதற்கு தயங்க மாட்டோம் என மீனவ சம்மேளனம் தெரிவித்துள்ளது.


No comments