விசாரணைகள் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி?
முன்னாள் கடற்றொழில் அமைச்சரின் இணைப்பு செயலாளராக கடமை ஆற்றிய நபரொருவர், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் வாங்கும் மற்றும் விநியோகிக்கும் முயற்சியின் போது முனையப் பகுதி ஒன்றில் குறித்த நபர் முன்னரும் பிடிபட்டதாகவும், பின்னர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், சர்வதேச அளவில் பிரபலமான போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்படும் நபர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய சகாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ள இணைப்பு செயலாளராக பணியாற்றிய நபருக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற தீவிர சந்தேகமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ் தேசியம் பேசும் கட்சிகளது உறுப்பினர்கள் சிலரும் போதைப்பெர்ருள் கடத்தலில் கைதாகியுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பும் சமூகத்தின் எதிர்காலமும் கருதி, விசாரணைகள் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி, முன்னெடுக்கப்பட வேண்டும் என் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.:

Post a Comment