அடுத்து இந்திய சோலாராம்!சூரியப் படல உற்பத்தியில் ஈடுபடும் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஒன்று, இலங்கையில் சூரிய படல உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக, துறைசார்ந்த இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தபோது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான இடங்களை அடையாளம் காண்பது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments