பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 16 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் எரிபொருள் தாங்கிய லொறியொன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கராச்சி பகுதியிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்ற பஸ் மீது குறித்த லொறி வேக்கட்டுபாட்டை இழந்த நிலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினரால் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் நால்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பஞ்சாப் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments