கிளிநொச்சியில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு


கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிணறு சுத்தம் செய்யும்வேளை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்றைய தினம் சனிக்கிழமை தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களால் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. 

அதன் போது, பழைய பி.கே.எல்.எம்.ஜி, ஏ.கே. ரவுன்ஸ்கள், 60 எம் செல் 5, டிக்னெட்கள்,  என்பவற்றுடன் பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments