பேராயர் மல்கம் ரஞ்சித் இனவாதப் போக்கில்??
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, சரத் வீரசேக, விமல் வீரசன்ச, உதய கம்மன்பில போன்று இனவாதப் போக்கில் செயற்பட விரும்புகின்றாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணகரம் இத்தகைய கேள்வியை எழுப்பியிருந்தார்.
இதனிடையே ஈழச் சைவத் தமிழர்களுக்குத் தொப்புள் கொடி உறவு தமிழ்நாடு. அயலானை நேசிப்பதற்குப் பதிலாக அயலான் மீது வெறுப்புக் காட்டு. இயேசுவின் பெயரால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற கர்pனால் இன்று இயேசுவின் கொள்கைக்கு மாறாக இந்தியாவுக்குப் பாலம் வேண்டாம் என்கிறார் என ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அயல் இந்தியா. இந்தியாவை இலங்கையர்கள் வெறுக்க வேண்டுமெனப் போதிக்கிறார் மல்கம் இரஞ்சித் எனவும் மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
Post a Comment