யானைகள் குழப்பத்திலும் சதி?

 


கண்டி தலதா பெரஹரவை சீர்குலைக்கும் வகையில் யானைகளை லேசர் கதிர்கள் மூலம் பொறிவைக்கும் திட்டமிட்ட திட்டம் உள்ளதா என்பதை ஆராயுமாறு அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பௌத்த ஊர்வலங்களை சீர்குலைக்கும் மற்றும் அவமதிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட திட்டம் பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி தலதா பெரஹராவில் பயணிக்கும் யானைகளை சங்கடப்படுத்த சிலர் லேசர் கதிர்களை பயன்படுத்துவதாக யானை மேய்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் யானைகள் மற்றும் பிற விலங்குகளை விரட்ட பயன்படுத்தப்படும் லேசர் கதிர்களை வெளியிடும் சிறிய சாதனங்கள் சில வாரங்களுக்கு முன் விற்பனைக்கு வந்ததாகவும் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments