யாழ்.பல்கலை மாணவன் கத்தியுடன் கைது


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவன் கத்தியுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 

வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று வர்த்தக நிலையத்தில் வேலை செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மாணவனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments