காவல்துறை அதிபர் விட்டில் பதுங்கிய கொலையாளிகள்

 


கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அம்பலாங்கொடை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தொழிலதிபரின் கொலையுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பதுங்கியிருந்த வீடு முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கரந்தெனிய சுத்தாவால் கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டி, அம்பிட்டிய பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ள நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இவ்விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரந்தெனிய சுத்தா மூலம் தனது மனைவியின் பெயரில் ஹசலக பகுதியில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென் மாகாணத்தில் இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான நீண்டகால பகை காரணமாக கோசல டி சில்வா கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தொழிலதிபர் கோசல மீது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதியன்று ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்றதற்காக கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியன்று கூர்மையான ஆயுதங்களால் அடித்து மற்றொரு நபரைக் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

No comments