ஆயிரக்கணக்கான கடற்படையினருடன் வந்தது அமெரிக்காவின் திரிப்போரி தாக்குதல் கப்பல்
சுமார் 3,500 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களை ஏற்றிக்கொண்டு, யுஎஸ்எஸ் திரிபோலி என்ற நீர்நிலத் தாக்குதல் கப்பல் மத்திய கிழக்கு வந்தடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் நேற்று சனிக்கிழமை அன்று தெரிவித்தது.
வழக்கமாக ஜப்பானில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அந்தக் கப்பல், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இப்பகுதிக்கு வந்தடைந்தது.
ஈரானியப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது என்ற அச்சம் அதிகரித்து வரும் வேளையில், இந்தப் படையணி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
அந்தப் போர்க்கப்பல், போக்குவரத்து மற்றும் தாக்குதல் போர் விமானங்களையும், அத்துடன் நீர்நிலத் தாக்குதல் மற்றும் தந்திரோபாயச் தளபாடங்களையும் ஏற்றிச் செல்கிறது என்று அமெரிக்க சென்ட்காம் கூறியது.

Post a Comment