கோத்தாவிற்கு கெடு! : எடுபிடிக்கு சிறை!



உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு மீதான மேலதிக விடயங்களைப் பரிசீலிப்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றமை தொடர்பான ஒரு சம்பவம் குறித்த விசாரணையின் தொடர்பில் அவர் இன்று காலை (18) கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவரின் தனிப்பட்ட செயலாளராக சுகீஸ்வர பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஸ் சாலேவிற்கு ஆதரவாக நேற்றைய தினம் சுகீஸ்வர கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments