கோத்தா தப்பிக்க திட்டமிட்டுள்ளாரா?



இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்டமிட்டுளளதாக தென்னிலங்கையில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

நிதிக்குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக, குறிப்பாக குற்றப் புலனாய்வுத் துறையும், இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையமும், பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் வெளிநாட்டுப் பயணத் தடைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை சமீபத்தில் எடுத்துள்ளன. 

இந்நிலையில் வரும் வாரங்களில் பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், மேற்கொள்ளப்படும் விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தவிர்த்து, பல்வேறு வழிகளில் இவர்கள் வெளிநாடு செல்லக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், இவர்களைக் கண்காணிக்க எடுத்துள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.


No comments