உரிமை கோரி குடுமிப்பிடி?
சொல்லிசைப்பாடகர் சங்கீத்சன் யாழ்ப்பாண நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவரது விடுதலைக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கை தமிழரசுக்கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கட்சி சார்பாக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப்பாடகர் சங்கீத்சன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை விடுவிக்கும் சட்ட முயற்சியில் சட்டத்தரணிகள் பலரும் பங்கெடுத்திருந்தனர்.
அவரின் விடுதலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் ஜனாதிபதியுடன் பேசியிருந்தார். இன்னும் பலரும் சங்கீத்சனின் விடுதலாக்க குரல் எழுப்பியிருந்தனர்.
தோடர்ச்சியாக விடுதலையை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களும் வடகிழக்கில் பரவலாக முன்னெடுக்கப்பட்டுமிருந்தது.
எனினும் இன்றைய தினம் சொல்லிசைப்பாடகர் சங்கீத்சனின் விடுதலையின் போது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது ஆதரவாளர்களும் விடுதலைக்கு உரிமை கோரிய செயற்பட்ட விதம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

Post a Comment