யாழில். தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினர் , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
அரசியல் கட்சிகளின் கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடினர்.

Post a Comment