செம்மணி வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்!
வடமாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மையத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிடவுள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேரில் பார்வையிடுவதற்காக, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ அனுமதியைக் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றினால் அதற்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கி உத்திரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தியோகபூர்வ அனுமதியின் அடிப்படையில், நாளை மறுதினம் புதன்கிழமை காலை 9:00 மணியளவில் செம்மணிப் பகுதிக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் இதுவரை 92 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் தடயவியல் முன்னேற்றங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவுள்ளனர்.

Post a Comment