அலிஎக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வரலாறு காணாத அபராதம் விதிப்பு
சட்டவிரோத, பாதுகாப்பற்ற மற்றும் கள்ளப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளில் குறைபாடுகளைக் கண்டறிந்த ஐரோப்பிய ஒன்றிய (EU) கட்டுப்பாட்டாளர்கள் விதித்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அலிஎக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத, பாதுகாப்பற்ற மற்றும் கள்ளப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளில் குறைபாடுகளைக் கண்டறிந்த ஐரோப்பிய ஒன்றிய (EU) கட்டுப்பாட்டாளர்கள் விதித்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அலிஎக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய சீன மின்வணிகத் தளமான அலிஎக்ஸ்பிரஸ், சட்டவிரோதமான, பாதுகாப்பற்ற மற்றும் கள்ளப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக 550 மில்லியன் யூரோ (629 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போலி ஆடைகள், பாதுகாப்பற்ற பொம்மைகள், அபாயகரமான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் பரவல் என்பது இணையவழி வர்த்தகத்தின் தவிர்க்க முடியாத ஒரு விலையல்ல. அது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் அலிஎக்ஸ்பிரஸ் தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதாகும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் ஹென்னா விர்க்குனென் கூறினார்.
அலிபாபா குழுமத்திற்குச் சொந்தமான அந்த இணையவழி சில்லறை வர்த்தகப் பெருநிறுவனம், அபராதத்தைச் செலுத்த வேண்டும். மேலும், விதிமீறல்களைச் சரிசெய்வதற்கான ஒரு திட்டத்தைச் சமர்ப்பிக்க அதற்கு அக்டோபர் 20 வரை அவகாசம் உள்ளது. அதன்பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டாளர்கள் அந்தத் திட்டத்தை மதிப்பாய்வு செய்வார்கள். அதன்பின்னர், அந்நிறுவனம் மேலும் சில தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஓராண்டுக்கு முன்பு, மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் போன்ற சட்டவிரோதமான மற்றும் அபாயகரமான பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க அலிஎக்ஸ்பிரஸ் ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த நடவடிக்கைகள் தங்களின் பரந்த கவலைகளை முழுமையாகத் தீர்க்கவில்லை என்று ஐரோப்பிய ஆணையம் கூறியது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையச் சேவைகளுக்கான தெளிவான விதிகளை வகுத்து, குறிப்பாக மிகப் பெரிய இணையத் தளங்களைக் குறிவைக்கும் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (DSA) கீழ் விதிக்கப்பட்ட அபராதங்களிலேயே இது மிகப்பெரியதாகும் .
இந்த அபராதம் மிக அதிகம் எனக் கருதுவதாகவும், சமமற்றது எனக் கூறப்படும் இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அலிஎக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Post a Comment