பல கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50% புதிய வரியை விதித்துள்ளது


அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் , பலதரப்பட்ட கனடியப் பொருட்கள் மீது  50% வரி விதிப்பதாக இன்ற திங்களன்று அறிவித்தது.

30 நாட்களில் இந்த வரிகள் அமலுக்கு வரும் என்றும், ஒயின் முதல் ஹாக்கி மட்டைகள், சிமெண்ட் வரையிலான பொருட்களை இது உள்ளடக்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரை சுங்க வரி விதிக்க அனுமதிக்கும், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பழமையான வர்த்தகச் சட்டமான 1930 ஆம் ஆண்டின் சுங்க வரிச் சட்டத்தின் 338 ஆம் பிரிவின் கீழ் டிரம்ப் மூன்று பிரகடனங்களில் கையெழுத்திட்டார்.

இருப்பினும், எரிசக்தி, பொட்டாஷ் (வேளாண் உரங்களில் பயன்படுத்தப்படுவது), மீன், முக்கிய கனிமங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் 232வது பிரிவின் கீழ் ஏற்கனவே உள்ள கட்டணங்களின் கீழ் வரும் பொருட்களுக்கு புதிய கட்டணங்கள் பொருந்தாது.

அமெரிக்கப் பொருட்களை கனடா பாகுபாடுடன் நடத்துவதற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மற்ற நாடுகளின் கார்களுக்குப் பொருந்தாத சுங்க வரிகளையும் ஒதுக்கீடுகளையும் கனடா அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு விதித்துள்ளது என்றும், கனடாவின் இரண்டு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களைத் தவிர மற்ற அனைத்தும் அமெரிக்க மதுபான விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும் அது கூறியது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, அதிபர் டிரம்பின் வரிகளுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கத் தேர்ந்தெடுத்த இரண்டு நாடுகள் மட்டுமே உள்ளன. அவை சீன மக்கள் குடியரசு மற்றும் கனடா, என்று வெள்ளை மாளிகை கூறியது.

No comments