பிள்ளையானிற்கு பாதையில்லை!
படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ராணுவப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகபூர்வத் தகவலாளிகள் இருவர் உட்பட மூவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், படுகொலைச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டுத் தற்போதைய நிலையில் லண்டனில் தங்கியிருப்பதாக உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ள முக்கிய சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தினால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பிடியாணை உத்தரவையும் நீடித்து நீதவான் இன்றைய தினம் பிரகடனம் செய்துள்ளார்.
தலைமறைவாக உள்ள சர்வதேசக் காவற்துறை (Interpol) ஊடாகக் கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான மேலதிக சட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களைச் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து தயாரித்து வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றுக்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment