மீண்டும் தலைவரானார் செல்வம்!

 


ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும் அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி கதிரைகளை தக்க வைக்க முற்படக்கூடாதென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவராக இன்று ஏகமனதாக செல்வம் அடைக்கலநாதன்  12 ஆவது தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா குருமன்காட்டுப்பகுதி நடை பெற்ற இன்றைய கூட்டத்திலேயே செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை நிலவிவந்த உட்கட்சி பூசல்களுக்கு நடுவில் இன்று 12 ஆவது தேசிய மாநாடு நடைபெற்றுள்ளது.

முன்னதாக செல்வம் அடைக்கலநாதனின் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் தொடடர்பில் பகிரங்க குற்றச்சாட்டுக்களை கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்.ஊடக அமையத்தில் முன்வைத்திருந்தனர்.

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தலைமையில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும்.அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி கதிரைகளை தக்க வைக்க முற்படக்கூடாதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே கட்சியின் உள்ளுராட்சி மன்ற தலைவர்களை முன்னிறுத்தி போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி கதிரைகளை தக்க வைக்க முற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். 


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பனிரெண்டாவது(12) தேசிய மாநாடு இன்று வவுனியா மாவட்டத்தில் மதியம் 2:30 மணிக்கு வோர்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் எட்டு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்ட பொதுக்குழு உறுப்பினர்களினால் மத்திய குழு உறுப்பினர்கள், தலைமை குழு உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகளின்  தேர்வு நடைபெற்றது. 

இத் தேர்வுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவராக  செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

கட்சியின் உப தலைவராக  குருசுவாமி சுரேந்திரன்  தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளர் நாயகமாக  கோவிந்தன் கருணாகரன் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும்  கட்சியின் நிதிச் செயலாளராக கமலவிஜிந்தன் அவர்களும், தேசிய அமைப்பாளராக  செந்தில்நாதன் மயூரன் அவர்களும், நிர்வாகச் செயலாளராக பரமலிங்கம் நித்தியானந்தன் அவர்களும் இளைஞரணிச் செயலாளராக  தியாகராஜா பிரபாகரன் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்


No comments