ஜெயானந்தமூர்த்தி இறைபதம் அடைந்தார்!



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இறைபதம் அடைந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தவர் பகுதிநேர ஊடகவியலாளராக வீரகேசரி, தமிழ்நெட்ஆகியவற்றில் பணியாற்றியவர்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் உறுப்பினரான இவர் மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் நடேசன், என பல்வேறு ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒருவர்.

2004 ,ஏப்ரல்,04, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலமாக   விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களில் இவரும் ஒருவராக  மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.அந்த தேர்தலில்  44,457 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத்தெரிவானார்.வடகிழக்கில் இருந்து தெரிவான 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.

அந்த காலம் பல நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் மத்தியில் எம்முடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரமுடியாமல் இருந்த சமயம் 2006,யூலை மாதம் மட்டக்களப்பில் ஜெயானந்தமூர்த்தி வசித்த மட்டக்களப்பு பூம்புகார் வீதியில் உள்ள அவரின் வீடுமீது இனம் தெரியாத நபர்களால் ஆர்.பி.ஜி தாக்குதல் ஒன்றும் இடம்பெற்றது.

“அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” எனும் பெயரில் ஒரு நூலையும் 2008, காலப்பகுதியில் வெளியிட்டிருந்தார்.

அந்த காலப்பகுதியில் இருந்த அச்சுறுத்தல் காரணமாக  2008 ல்   இவர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் புலம் பெயர்ந்து வாழ்ந்தார்.

2010 மே மாதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலிலும் லண்டனில் உறுப்பினர் தெரிவில் இவரும் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியும் இருந்து பின்னர் விலகியும் இருந்தார்.


No comments