பாடசாலை மாணவிகள் , முதியவர்கள் 14 பேர் கைது!



கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிபடையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும்  நோக்கில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த விசேட அதிரடிப்படையினர் காட்டுக்குள் உழவு இயந்திரத்துடன் ஒருவரை கைது செய்ய முற்பட்ட  போது பொது மக்களுக்கும்  விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. இதன் போது விசேட அதிரடிப்படையினர்  சம்பவத்தில் ஈடுப்பட்டு அனைத்து தரப்பினரையும் தாக்கி கைது செய்து கிளிநொச்சி நீதி மன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்படுத்தி  அவர்களை நாளை திங்கள் வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர்.

இதன்போது சிறு குழந்தைகள் இருவர் அவர்களது தாய் தந்தை மற்றும் பாடசாலை மாணவிகள் இருவர், முதியவர்கள் என 14 பேர் இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments