செல்வத்திற்கு குடைச்சல்?
கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்சி இருந்துவருகின்றது.
இந்நிலையில் கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஏகநாதன் வியஜபவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஏகநாதன் வியஜபவானந்தா யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளே கட்சி நலிவடைந்து போக பிரதான காரணமாகியுள்ளது.
கட்சியின் மூத்த உறுப்பினர் ஜெயராம் சுரேஸ் கொலையிலும் செல்வத்தின் செயற்பாடுகள் உள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. அது மட்டுமல்லாது அதற்கான சான்றுகளும் வலுவாக இருக்கின்றது.
பாலியல் விவகாரத்தில் சிக்குண்ட பின்னரும் தலைமை பதவியை தக்கவைக்கவென தலைமை குழுவிடம் கெஞ்சிப் பெற்ற கால அவகாசத்தை பயன்படுத்தி இன்று தனது பதவியை நிரந்தரமானதாக உறுதி செய்திருக்கிறார் செல்வம் அடைக்கல நாதன்.
சிரேஸ்ட உறுப்பினர் ரமேஸின் கொலைக்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை. பாலியல் விவகாரத்துக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக தமிழீழ விடுதலை இயக்கம் மீளப் புனரமைக்கப்பட வேண்டும். அதை சுட்டிக் காட்ட முயற்சித்தால் அல்லது, தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டால் அவர்கள் எல்லாம் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படுகின்றது.
எம் எல்லோருக்கும் எதிரான பொது எதிரி எங்கோ இருக்கும் நிலையில் நாம் எமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். இதுதான் இன்றைய துரதிஸ்டமெனவும் ஏகநாதன் வியஜபவானந்தா தெரிவித்துள்ளார்.

Post a Comment