முதலில் கோத்தாவா? யோசிதாவா?

 



ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் முதலாவது கைதாக மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ  கைதாகலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு திட்டமிட்ட சதி என்றும் தன்மீதான  குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, யோசித தாக்கல் செய்த வழக்கின் தீரிப்பு வெளியாகவுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச தாக்கல் செய்த மனுவின் விசாரணை நிறைவடைந்துள்ளது. அதற்கான தீர்ப்பு ஜூலை 3-ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மகிந்த குடும்பத்தை சேர்ந்தவரும் தனது பேர்த்தியாருமான டெய்சி என்ற பெண்ணுடன் இணைந்து நிதி மோசடி குற்றத்தைப் புரிந்ததாகக் கூறி, சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பஸில் ராஜபக்சவிற்கு பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோத்தபாயவும் கைது அச்சத்தில் முன்தடை கோரியுள்ளார்.

மறுபுறம் மகிந்தவின் மனைவி மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுக்களின் விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments