உள்ளே தள்ளும் படலம்:அச்சத்தில் தெற்கு!



கொழும்பில் அரசியல் தலைவர்களை உள்ளே தள்ளும் படலம் சூடுபிடித்துள்ள நிலையில் கைது அச்சத்தில் பலரும் முன்னாயத்தங்களில் குதித்துள்ளனர்.

அவ்வகையில் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுத்து கட்டளையை பிறப்பிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

மனுவில் இலங்கை காவல்துறை அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் அதன் தலைவர் மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது நெருங்கிய சகாக்களான இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் வெளிநாட்டுப் பயணத்தடையை கடந்த 03  அன்று விதித்திருந்;தது.

இந்நிலையில் பிள்ளையான் மற்றும் சுரேஸ் சாலே வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில் ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாக கோத்தபாய அடையாங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் எந்நேரமும் கைதாகலாமென்ற அச்ச நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் இராணுவ கேர்ணல் முஹம்மது அன்சார் மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம ஆகியோருக்கு பயணத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளமை தெரிந்ததே.


No comments