செம்மணி மனிதப் புதைகுழி:405!
இன்று மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 405 மனித எலும்புக்கூடுகள் இலக்கமிடப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், புதைகுழியின் ஒரு பகுதியில் 9 மனித எலும்புக்கூடுகள் ஒன்றாக குவிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி இன்று நாட்டின் மிக முக்கியமான மனித உரிமைச் சான்றுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இதுவரை அங்கிருந்து 405 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், முன்னர் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்பட்டமன்னார் சதொச புதைகுழியின் 376 எலும்புக்கூடுகள் எண்ணிக்கையையும் செம்மணி கடந்துள்ளது.

Post a Comment