அனுர அரசின் புதிய நாடகம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்;கள் உயிருடன் இருப்பதாக மீண்டும் நாடகமொன்றை சர்வதேச அரங்கில் அரங்கேற்ற அனுர அரசு தயாராகிவருகின்றது.
காணாமல போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 23,352 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றில் 16,966 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.
விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட 800 பேருக்கு விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 7,726 பேருக்கு அவர்களது சம்மதத்துடன் இடைக்கால கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அல்லது இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போனவர்களில் இதுவரை எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை“ என முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment