திரண்டு வந்த போராட்டகாரர்கள்?




இலங்கையினில் இன்றைய தினம் பௌர்ணமி தினக்கொண்டாட்டங்களில் பௌத்தர்கள் ஈடுபட மறுபுறம் யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் இன்று  போராட்டத்தில் ஒரு சிறுபகுதியினர்  ஈடுபட்டிருந்தனர்.

தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றபோதும் மிக குறைவான கட்சியினரே போராட்டங்களில் பங்கெடுத்து வருகின்றமையை எதிர் தரப்புக்கள் விமர்சித்துவருகின்றன.

இதனிடையே அரசின் அமைச்சரான சந்திரசேகரனோ தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்;டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் பணி விரைவில் இடம்பெறுமென தெரிவித்துள்ளார்.

எனினும் விகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க தையிட்டி விகாரையின் விகாராதிபதி மறுத்தே வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments