சொனிக் சொனிக்:கோத்தபாயாவா?
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை அண்மித்துள்ளதாக அனுர அரசு அறிவித்துள்ள நிலையில் “ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி” எனும் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் கோத்தபாய ராஜபகச் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கலந்துகொண்டமை பேசுபொருளாகியுள்ளது.
கோத்தபாய அமைச்சரவையின் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில எழுதிய நூல் வெளியிட்டு நிகழ்வில் சஜித் பிறேமதாசா கலந்து கொண்டமை கூடிய கவனத்தை ஈர்த்துள்ளது.
‘சொனிக் சொனிக்’ என்ற புனைப்பெயரைக் கொண்ட ஒருவரே ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
அவ்வாறான பின்னணியில், கோத்தபாய விசுவாசியான கம்மன்பிலவின் “சூத்திரதாரியை வெளிப்படுத்தும்” நிகழ்வில் அவர்கள் பங்கேற்றமை கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான கோத்தபாய ராஜபக்சவுடன் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரஞ்சித் மத்தும பண்டார, வாசுதேவ நாணயக்கார, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய உதய கம்மன்பில, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் தவிர வேறு எவருமில்லை என கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Post a Comment