கொழும்பிலும் விளக்கேற்ற அனுமதியில்லையாம்!



 இனவாதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கறுப்பு ஜூலை இனக் கலவரத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதிக்கோரியும், படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுக்கூறும் நிகழ்வு பொரளையில் நடைபெற்றுள்ளது.

எனினும் நினைவேந்தலில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டதுடன் ஏற்றப்பட்ட விளக்குகள் கால்களால் மிதித்து நாசமாக்கப்பட்டுள்ளது.

காவல்துறை,இராணுவம,சிறப்புப் பணிப் படைகள்  இடையூறு விளைவித்த கலவரக்காரர்களை வெறுமனே வேடிக்க பார்த்துக் கொண்டிருந்தனர்.கறுப்பு ஜீலை நினைவேந்தல்  என்பது தீபம் ஏற்றி இறந்தவர்களை நினைவுகூருவது. இதற்கிடையில், ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்குகளை போலீசார் பறித்தனர்.

உண்மையில், ஆட்சியாளரின் பழம்பெருமை எங்கே? பொரளை மயானச் சுற்றுவட்டமும் பாதுகாப்பு.. யாருக்காக என போராட்டகாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.






No comments