வவுனியாவில் புகையிரத விபத்து - இருவர் படுகாயம்


காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகர்சேர் கடுகதி புகையிரதம்  வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயில் கடவையை கடந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இச்சம்பவம் இன்றைய தினம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் லொறி சாரதியும், உதவியாளரும் படு காயமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் இந்த ரயில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த போது மீசாலையில் முதியவர் ஒருவர் ரயில் கடவையை கடந்த போது மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments