யேர்மனியில் அதிகதிள் இல்லத்திற்குள் நுழைந்த முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல்


கிழக்கு யேர்மனியில் உள்ள அகதிகள் இல்லத்தின் மீது முகமூடி அணிந்த நபர்கள் இனவெறித் தாக்குதல் நடத்தியதில் 18 வயதுடைய ஆப்கானிஸ்தான் குடிமகன் காயமடைந்தார்.

சாக்சோனியில் உள்ள செப்னிட்ஸ் நகரில் உள்ள அகதிகள் தங்குமிடம் மீது முகமூடி அணிந்த நான்கு பேர் இனவெறித் தாக்குதலை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தினர். 

தாக்குதல் குழு கட்டிடத்திற்குள் பின் கதவு வழியால் நுழைந்தது, 18 வயது ஆப்கானிய குடிமகனைத் தாக்கியபோது குறித்த நபர்கள் இனவெறிக் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

தாக்குதல் நடந்த இடத்திற்கு கூடுதல் குடியிருப்பாளர்கள் வந்ததை அடுத்து அந்த நபர்கள் வீட்டை விட்டு தப்பியோடினர்.

சம்பவத்தில் 16 வயது இளைஞன் காயமடையவில்லை. அதே நேரத்தில் 18 வயதுடைய ஆப்கான் இளைஞனுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையிட்னர். சந்தேகத்திடமான எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

ஆபத்தான உடல் ரீதியான தீங்கு, வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் போன்ற குற்றங்களை டிரெஸ்டன் காவல்துறையினர் விசாரித்து வருவதாகக் கூறியது.

No comments