அதிக வெப்பத்தால் காட்டுத் தீ: கிறீஸில் 2000 பேர் வெளியேற்றம்!!


கிறீஸ் (கிரேக்கம்) நாட்டில் அமைந்துள்ள தீவான ரோட்ஸில்  ஐந்தாவது நாளாக எரியும் பொிய காட்டுத் தீயாால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 2,000 பேர் கடல் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

அத்தீவில் அமைந்துள்ள கடரோல ஓய்வு விடுதிகள் உட்பட முக்கியமான நான்கு இடங்கிலிருந்து மக்களை வெளியேறுமாறு அரசாங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்பாக உல்லாச விடுதிகள், வாடகை வீடுகள், சுற்றுலா விடுதிகளிலிருந்து பல நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மூன்று கடலோரக் காவல்படகுகள், ஒரு இராணுவ உயிர்காக்கும் படகு, ஒரு சிறப்புப் படையின் ஊதப்பட்ட கப்பல் மற்றும் 30 தனியார் பாய்மரப் படகுகள் வெளியேற்றத்திற்கு உதவின.

தனியார் பயணிகள் கப்பல் நிறுவனமான புளூ ஸ்டார், வெளியேற்றப்பட்ட சிலருக்கு இடமளிக்க அதன் கப்பல்களில் ஒன்றை வழங்கியுள்ளது.

மிக அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட நிலைமைகள் காரணமாக தீ ஏற்பட்டு பரவியுள்ளது. தீயினால் 3 விடுதிகள் பாதிக்கப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று விமானங்கள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர்களின் உதவியுடன் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 தீயணைப்பு இயந்திரங்கள் தரையில் இயங்கி தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

ஐந்து தீயணைப்பு இயந்திரங்களுடன் ஸ்லோவாக்கியாவிலிருந்து 31 தீயணைப்பு வீரர்ளும் தீணைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

No comments