கைதடியில் சூப்பர் மார்க்கெட் உடைத்து கொள்ளை


யாழ்ப்பாணம் கைதடி சந்திக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றினை உடைத்து 03 இலட்ச ரூபாய் பணம் மற்றும் பால் மா பைக்கெட் , குளிர்பான வகைகள் என்பவற்றை, நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

 குறித்த கொள்ளை சம்பவம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் , கொள்ளையில் ஈடுபட்ட நபரை அதன் அடிப்படையில் அடையாளம் கண்டுள்ள நிலையில் , சாவகச்சேரி பொலிஸார் கொள்ளையனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments