நல்லாட்சி ரணிலிடம் மிச்சமும் பறிபோனது!

 


நெடுந்தீவு வெடியரசன் கோட்டை  பௌத்த தொல்பொருள் சின்னம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின்  கட்டுப்பாட்டிலிருந்த கன்னியா வெந்நீர் ஊற்றின்  வருமானமும்   மாவட்ட செயலகத்திடம் இருந்து தொல்பொருள் திணைக்கள கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. 

இராவணன் தன் தாயின் இறுதி கிரிகைகளுக்காக தனது வாள் கொண்டு உருவாக்கியதாக இலக்கியங்களில் சொல்லப்படும் திருகோணமலை கன்னியா ஏழு வெந்நீர் ஊற்றினை அனுராதபுரகால பௌத்த தொல்லியல் சின்னமென இலங்கை தொல்லியல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

தொல்லியல் திணைக்களத்தினால் கன்னியா ஏழு வெந்நீர் ஊற்று கிணறுகளை பார்வையிட வருவோரிடம் இருந்து கட்டணம் அறவிடப்படுகின்றது. அதற்காக கட்டணச்சீட்டும் விநியோகிக்கப்படுகின்றது. வருமான முகாமை மற்றும் பராமரிப்பு  என்பன பௌத்த அடையாளம் இருப்பதாக சொல்லப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

விநியோகிக்கப்படும் கட்டணச்சீட்டில், இது அநுராதபுர காலத்தில் பயன்படுத்தியதாகவும், தொல்லியல் சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட பௌத்த மத வளாகத்தில் அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலின் ஒரு அங்கமாக கன்னியா வெந்நீர் ஊற்றையும் கையகப்படுத்த முயற்சிகள் தொடர்கின்றது.


No comments