யாழில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது!


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்,

யாழ்ப்பாண நகர பகுதியில்  உள்ள காட்வெயர் விற்பனை  நிலையம் ஒன்றினை உடைத்து ஐந்து லட்சம் ரூபா  பெறுமதியான பொருட்களை திருடியமை மற்றும் நாவாந்துறை பகுதி ஒன்றில் வீடு உடைத்து பொருட்களை திருடியமை ஆகிய குற்றச்சாட்டில் பொம்மை வெளியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர் 


No comments