குப்பைகளால் நிரப்பி வழியும் பாரிஸ்
பிரான்சில் அரசாங்கம் ஓய்வூதியத் திருத்தத்தை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்காக தொழிற்சங்கங்கால் மேற்கொண்டுவரப்படும் வேலை நிறுத்தப் போராட்டாத்தால் பிரான்சில் வீதிகள் முழுவதும் குப்பைகளால் நிரம்பி வழிகின்றன.
பிரான்சின் தலைநகர் பாரிசில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் கடந்த வாரம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நகரில் வீதிகள் முழுவதம்
குப்பைகளால் நிரம்பிக் காணப்படுகின்றன.குறித்த போராட்டம் எதிர்வரும் 20ஆம் நாள் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் இருகரையிலும் 6,600 டன் குப்பைகள் கிடக்கின்றன என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஓய்வூதிய வயதை 62 இலிருந்து 64 ஆக உயர்த்துவதற்கு பிராஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Post a Comment