மீண்டும் எகிறும் டொலர்


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதத்தில் டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.59 ரூபாயாகவும் விற்பனை விலை 344.66 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84 ஆகவும், விற்பனை பெறுமதி 335.68 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments