வளர்ப்பு நாயால் சர்ச்சையில் சிக்கினார் ரிஷி சுனக்


பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் வளர்ப்பு நாய் லண்டன் பார்க்கில் சங்கிலி இல்லாமல் சுதந்திரமாக சுற்றிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுஇடங்களில் சங்கிலியுடன் வளர்ப்பு நாயை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சட்டம் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அந்நாட்டு பிரதமராக உள்ள இந்திய வம்சாவழியான ரிஷி சுனக் குடும்பத்தினருடன் லண்டன், ஹைதி பூங்காவில் (Hyde Park) நடைப்பயிற்சி சென்ற கொண்டிருந்தபோது அவரது வளர்ப்பு நாயான நோவா சங்கிலி இல்லாமல் சுற்றிய காணோளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

ஏற்கனவே மகழுந்தில் இருக்கும் பட்டி அணியாமல் இருந்ததாகவும் சர்ச்சையில் சிக்கிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு புதுப்பிரச்சினை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments