ஈரானியர்கள் உடலம் ஈரானிற்கு!

 




இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அதன்படி, 84 பேரின் உடல்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்து.

தாக்குதலின் பின்னர் இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 32 பேரை மீட்டிருந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.

தாக்குதலில் கொல்லப்பட்ட 84 பேரி சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், ஈரானிய மாலுமிகள் தொடர்பில்  அரசாங்கம் ஒரு மாத இலவச விசாக்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.


No comments