முன்னணியின் சாவகச்சேரி நகரசபையில் குழப்பம்!
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக எவ்வகையில் தீர்மானம் எடுக்கமுடியுமென கேள்வி எழுப்பியுள்ளது முன்னணி.
சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தொடர்பில் வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபைச் செயலாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.
உப தவிசாளர் எந்தவொரு அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பொதுக் கொள்கைகளைச் சரியான திசைக்குக் கொண்டு செல்லவே அவர் முயன்றார் என்றும் உப தவிசாளரின் பேச்சைக் கட்டுப்படுத்த தவிசாளர் தவறிவிட்டார்" என ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுதலித்துள்ளனர்.
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைக் குழப்பும் வகையில் பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி தவிசாளருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பது விந்தையானது .சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

Post a Comment