ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அயன் பீம் லேசர் பாதுகாப்பு அமைப்பை வழங்கியது - இஸ்ரேல்


ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதுகாப்பதற்காக, இஸ்ரேல் தனது சமீபத்திய 'அயன் பீம்' லேசர் பாதுகாப்பு அமைப்பை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய தூர ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் லேசர் கதிர்கள் மூலம் அழிக்கக்கூடிய இந்த அமைப்பை, இஸ்ரேல் தனது எல்லைகளுக்கு வெளியே உள்ள நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ட்ரோன்களைக் கண்டறியக்கூடிய 'ஸ்பெக்ட்ரோ' என்ற மேம்பட்ட கண்காணிப்பு அமைப்பையும் இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்கியுள்ளது.

மேலும், 'அயர்ன் டோம்' அமைப்பு மற்றும் அதை இயக்குவதற்காக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

சமீபத்தில், ஈரான் அந்த அமீரகத்தின் மீது 500-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 2,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் ஏவியுள்ள நிலையில், அதை முறியடிப்பதற்காக இஸ்ரேல் இந்த உதவியை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

No comments