மண்டைதீவு :மைதானம் ஆட்டம் காண்கின்றது!
அனுர அரசினால் பெரும் பிரச்சாரங்களுடன் முடுக்கிவிடப்பட்ட மண்டைதீவு யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் ஆட்டங்காண தொடங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்த யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம், தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் வசதிகளை மேம்படுத்தும் உறுதிப்பாட்டில் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்ந்து இருப்பதாக தெரிவித்தவாறே, திட்டத்தின் அளவு கணிசமாகக் குறைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது..
முதலில் முன்மொழியப்பட்ட திட்டத்தில சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு நகரம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
ஆனால் திட்டத்தின் மிகப்பெரிய அளவும், கிடைக்கக்கூடிய நிதியின் வரம்பும் காரணமாக, தற்போது அந்த முழுத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது என கருதுகிறது.
இதனால், சர்வதேச மைதானம், விளையாட்டு நகரம் மற்றும் வீடமைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக, ஒரு கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் வகையிலான குறைக்கப்பட்ட திட்டமே முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment