சாவகச்சேரியில் போராட்டம்!
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளையதினம் வெள்ளிக்கிழமை போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோரபதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முறையான, நீதியான தீர்வு கோரியும் தென்மராட்சி சமூகத்தால் கடையடைப்பு போராட்டம் சாவகச்சேரியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக சாவகச்சேரி நகரசபை சபையின் உப தவிசாளர், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் அறிவிப்பை சபை அமர்வின் போது விமர்சனம் செய்து தூக்கி வீசியதாக தெரிவித்து வடக்கு ஆளுநரால் பதவிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வவுனியா மாநகரசபையின் முதல்வர் வடக்கு ஆளுநரால் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment