அமெரிக்க ஆதரவு:தொடர்பில்லை –சாம்!







வளைகுடா யுத்தம் தொடர்பில் அமெரிக்க இஸ்ரேல் அரசுகளை பாராட்டி பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் தீர்மானாத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது தீர்மானம் எமது கட்சிக் கோட்பாடுகளுக்கு முரனானதும் கூட. எமது ஆளுகைக்குள் இருக்கும் மற்றைய சபைத் தவிசாளர்களும் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே கட்சித் தலைவரும் நானும் அவர்களுக்கு கடுமையான உத்தரவை வழங்கியுள்ளோமென எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

 சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்கு வேறு மட்டங்களில் பொறுப்புள்ளவர்கள் இருக்கிறார்கள். தீர்மானமும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் எந்தப் பின்னணியில் உருவானவை என்பதை நாம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம். தவிசாளர் ஏற்கனவே கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு கட்சி உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட ஒருவர் என்பதும் கவனிக்கத் தக்க விடயமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உலக அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவைத் தெரிவித்து, போரில் ஈடுபட்ட தரப்பினர் சர்வதேச சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும், உலக அமைதியை சீர்குலைக்கக்கூடாது, மனிதாபிமான மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென  பளை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் தீர்மானம்   நிறைவேற்றப்பட்டுள்ளது.

போரின் வடுக்கள் மற்றும் காயங்களை அனுபவித்த ஒரு சமூகமாக, போரின் விளைவுகள் மிகவும் கொடூரமானவை என்பதை நாங்கள் ஆழமாக அறிவோம். உலக அமைதியைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான முயற்சிக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோமெனவும் தமிழரசுக்கட்சி ஆளுகைக்குட்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


No comments